*கோடை காலத்தில் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் அல்லது எலுமிச்சம்பழச்சாறு அல்லது மோர் குடிக்க வேண்டும்.
*சூடான பானங்களான காபி, டீ போன்றவற்றையும் எண்ணெய் பலகாரத்தையும் தவிர்க்க வேண்டும்.
*கோடை காலத்திற்கு பருத்தி ஆடைகளே நல்லது. பாலிஸ்டர், பட்டு முதலியவைகளை தவிர்க்க வேண்டும். வெயிலைக் கிரகிக்கும் வண்ணங்களைத் தவிர்த்து இளநிறம் அல்லது வெண்மை நிற ஆடைகள் கோடை காலத்தில் அணிய சிறந்ததாகும்.
*வெயிலில் போய் வந்ததும் ஒரு பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி கால்களை 10 நிமிடம் அதில் வைத்திருந்தால் நல்லது. இளம் சூடான நீரில் காலை வைத்தால் கால்களின் நரம்புகள் விரிவடைந்து இரத்த ஓட்டம் சரியாகும். சூடு தணியும். கால்வலி நீங்கும். நல்ல தூக்கம் வரும்.
*வெயிலில் சென்று விட்டு வீடு திரும்பியதும் உடனே குளிர்ந்த பானங்களை குடிக்கக் கூடாது. வெது வெதுப்பான நீரைக் குடித்த பின்னரே குளிர்பானங்களைக் குடிக்க வேண்டும். அல்லது அரை மணி நேரம் சென்ற பின்னர் குளிர்பானம் குடிக்க வேண்டும்.
*கோடை காலத்தில் பருத்தியால் ஆன படுக்கை விரிப்புகளையே பயன்படுத்துவது சிறப்பாகும்.
*இரவில் வெந்தயம், பச்சைப் பயிறு இரண்டையும் நீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து தலையில் அரை மணி நேரம் ஊறவைத்து பின் குளிக்க வேண்டும். இதனால் தலைச் சூடு நீங்கும். முடி உதிராது. கண்கள் குளிர்ச்சி பெறும்.
*கோடை காலத்தில் தர்ப்பூசணி சாப்பிடுவது நல்லது. இது வறட்சியைத் தணித்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கிறது. சிறுநீரகக் கோளாறுகள், பசியின்மை, மலச்சிக்கல், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளை தர்ப்பூசணிச் சாறு நீக்கும். மருத்துவ குணம் கொண்டது.
*தர்பூசணியை வெட்டிய உடனேயே சாப்பிட வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிடக்கூடாது.
*உணவு வகைகளுடன் குளிர்ச்சி தரும் கீரை, நீர்ச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும்.
- எல். நஞ்சன்.
