லக்னோ: யுனெஸ்கோ இயக்குனர் ஜெனரல் ஆட்ரி அசோலே கடந்த 31ம் தேதி 58 நகரங்கள் யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகர வலையமைப்பின் புதிய உறுப்பினர்களாக நியமித்தார். இதில் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளின் 408 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோ நகரமும் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இது நகரத்தின் சமையல் பாரம்பரியத்திற்கான உலகளாவிய அங்கீகாரத்தை குறிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுயைான கலூட்டி கபாப் முதல் அவதி பிரியா, சுவையான சாட் மற்றும் கோல்கப்பே, மகான் மலாய் போன்ற இனிப்பு வகைகள் உட்பட மேலும் பல உணவு வகைகள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ உணவுக்கான சொர்க்கமாகும்.
