சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்
01:26 PM Sep 12, 2024 IST
Share
Advertisement
திருப்பூர்: சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூருக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூரில் உள்ள மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையை முடித்துக் கொண்டு நாளை மகாவிஷ்ணுவை போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர். மகாவிஷ்ணுவிடம் விசாரணையை ஒட்டி பரம்பொருள் அறக்கட்டளை அலுவலக பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கடந்த வாரம் கைதாகினர். மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.