மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களின் ஒப்பந்த பணிக்காலம் ஓராண்டாக குறைப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு
Advertisement
இதையடுத்து, 2 ஆண்டுகளாக இருந்த அரசு சாரா ஒப்பந்த பணியை ஓராண்டாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்று மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆண்டுக்கு 700 முதுநிலை பட்டதாரி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் அரசு சாரா பணியில் சேருகின்றனர். இதில் வெளிமாநில பட்டதாரி மருத்துவர்களும் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணி செய்யும் நிலை ஏற்படுகிறது. ஒப்பந்த பணிக்காலத்தை குறைத்ததன் மூலம் தமிழக மருத்துவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும். மேலும் மருத்துவர்களுக்கு அரசு விரைந்து பணி நிரந்தரம் செய்வதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
Advertisement