விருதுநகர்: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது நல்லதல்ல என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி, விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது நல்லதல்ல. போலீஸ் நிர்வாகத்தை நவீனப்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது பராமரிப்பு பணிகள் மட்டுமே செய்யப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு முறையும் டோல்கேட் கட்டணம் அதிகரிப்பு செய்வது கண்டனத்துக்குரியது.
விருதுநகரில் வந்தே பாரத் ரயில் நிற்காமல் செல்வதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் உள்ள ஒரு அதிகாரியே காரணம். இது குறித்து அமைச்சரிடம் பேசும்போது எல்லாம் தவறான தகவல்களை கொடுத்து வருகிறார். விருதுநகரில் சமீபத்தில் தற்காலிக செவிலியர் 129 பேர் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு தகவல் தெரிவிப்பேன்.
இவ்வாறு தெரிவித்தார்.


