அரசியலமைப்பின் 46 வது சட்டத்தின் அடிப்படையில் சுருக்க முடி வலையை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
புதுடெல்லி: சுருக்குமடி வலை தொடர்பான வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முழுமையாக தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்ததோடு, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் சுருக்கும்படி வலை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பில் வலைவீச்சு மீன்பிடி முறை உட்பட சில அழிவுகரமான மீன்பிடி முறைகளின் பயன்பாட்டை மட்டுமே தடை செய்துள்ளது, மேலும் இந்திய அரசியலமைப்பின் 46-வது பிரிவின் கீழ், சமுதாயத்தின் நலிந்த பிரிவினரின் நலன்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. மேலும் அத்தகைய பாதுகாப்பு பொதுமக்களின் நலனுக்கும் உகந்தது. எனவே, மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பிற்குள் கூறப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் பயன்பாட்டின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு, அரசியலமைப்பின் 19(6) பிரிவின் பொருளின்படி ஒரு நியாயமான கட்டுப்பாடாக வகைப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் வலைவீச்சு மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மூன்று இயந்திர மீன்பிடிக் கப்பல்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட அனுமதியை வழங்குவதன் மூலம், இந்த மாண்புமிகு நீதிமன்றம் 24.01.2023 தேதியிட்ட உத்தரவின்படி வழங்கிய இடைக்கால வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு கடுமையாகப் பின்பற்றிச் செயல்படுத்தியுள்ளது.
கடந்த பணியில் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் அதன் தொடர்புடைய விதிகளின்படி, குறிப்பிட்ட கால்வாய்களை அறிவிக்கும் தீவிரப் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் உள்ள குறிப்பிட்ட கால்வாய்கள் வழியாக இயந்திர மற்றும் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள் செல்வதைக் கட்டுப்படுத்தும் விரிவான வழிகாட்டுதல்களை அங்கீகரிப்பதற்கான முன்மொழிவும் இறுதிப் பரிசீலனையில் உள்ளது. மேலும் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதிச் சீட்டுகள் பெறும் செயல்முறை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதை பயன்படுத்துவதை தடை விதிக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


