Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஜிடிபி புள்ளிவிவரங்கள் குறித்து விமர்சனம்; காங். கட்சி கடுமையான போதையில் உள்ளதா?.. ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சாடல்

புதுடெல்லி: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்து காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்கிய நிலையில்அக்கட்சி கடுமையான போதையில் உள்ளதா என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்திய பொருளாதாரத்தை மதுபானமாகவும் அதிகாரப்பூர்வ ஜிடிபி புள்ளி விவரங்களை அதன் நுரையாகவும் சித்தரிக்கும் வகையில் பீர் கோப்பையின் படம் ஒன்றை கேரள காங்கிரஸ் வெளியிட்டு இருந்தது. இந்த போலியான கதையை இனி யாரும் நம்புவதில்லை. இந்த மோசடியை உலகம் அறிந்து கொள்ளும் என்றும் கேரள காங்கிரஸ் பதிவிட்டு இருந்தது.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் தளத்தில், ”அதிகப்படியான பீர் அருந்தியதால் காங்கிரஸ் கடுமையான போதையில் உள்ளதா? அல்லது இந்தியாவின் வளர்ச்சியின் மீதான கண்மூடித்தனமான வெறுப்பால் யதர்த்த நிலையை மறந்துவிட்டார்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.