தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டை மோதல் களமாக்கி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்: ஒன்றிய அமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டை மோதல் களமாக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், திமுக அரசு மற்றும் முதலமைச்சர் குடும்பம் தொடர்பாக விஷமத்தனமான அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

Advertisement

சமூகத்தின் ஆறில் ஒரு பங்கு மக்களை சமூக வட்டத்திற்கு வெளியே நிறுத்திய, சமூக புல்லுருவித்தன, புரோகிதக் கருத்துகளுக்கும், புராண புரட்டுகளுக்கும் எதிராக அறிவியல் கண்ணோட்டத்தையும், பகுத்தறிவு கருத்துகளையும் ஒரு நூறாண்டுகளாக பரப்புரை செய்து, தமிழ் சமூகத்தை பண்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கருத்துகளுக்கு கொள்கை வழி செயல்வடிவம் தருவதில் திமுக அரசு சிறப்புப் பெற்றுள்ளது. கலைஞர் குடும்பம் சாதி, மத அடையாளங்களை கடந்து பொதுவாழ்விற்கு பெருமை சேர்த்த சிறப்புக்குரியது. இதனையெல்லாம் மறைத்துவிட்டு, திமுக அரசையும், முதலமைச்சர் குடும்பத்தையும் இந்து விரோத அடையாளமாக்க முயற்சிக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல். இதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

சமூக வாழ்வில் இயல்பான இறையிலாளர்களை, ஆன்மிக நம்பிக்கையாளர்களை இந்து மதவெறியர்களாக்கி, மதச் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அணி திரட்டி, நல்லிணக்க சூழலும், சமூக அமைதியும் நீடித்து வரும் தமிழ்நாட்டை மோதல் களமாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News