மாற்றித்தரப்பட்டுள்ளதாக புகார் ஹமாஸ் ஒப்படைத்த 3 உடல்கள் தவறானவை: இஸ்ரேல் தகவல்
ஜெருசலம்: ஹமாஸ் ஒப்படைத்த உடல்களில் 3 உடல்கள் இஸ்ரேல் பணய கைதிகளின் உடல்கள் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், ஹமாஸ் பிடித்து சென்ற 30 இஸ்ரேல் பணய கைதிகளின் உடல்கள் இஸ்ரேல் ராணுவதத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
Advertisement
இதில் அடையாளம் தெரியாத 3 பேரின் உடல்கள் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த உடல்கள் ஒரேஇரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டன. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவத்தினர், “அடையாளம் தெரியாத 3 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. அவை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பயண கைதிகளுடையது இல்லை. அந்த உடல்கள் இஸ்ரேல் பணய கைதிகளுடன் தொடர்புடையவர்களின் உடல்கள் இல்லை” என தெரிவித்துள்ளது.
Advertisement