சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அரிசி விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சில உயர்தர அரிசி ரகங்கள் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 3ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


