Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கொலம்பியாவுக்கு எதிராக பெனால்டியில் வென்றது சுவிஸ்

வான்கூவர்: கொலம்பியா சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய கடைசி ரவுண்ட் ஆப் 16 போட்டி 0-0 என டிராவில் முடிவடைந்த நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் சுவிஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

பிசி பிளேஸ் வான்கூவர் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் முழு பலத்துடன் செயல்பட்டதால் ஆட்ட நேரம், கூடுதல் நேரத்திலும் கோல் ஏதும் விழாமல் 0-0 என சமநிலை வகித்தன.  இதையடுத்து, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் சுவிஸ் அணி 4-3 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

* நடுவர்கள் நியமனத்தில் சர்ச்சை

நடப்பு உலக கோப்பை தொடரின் ரவுண்ட் ஆப் 16 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், பரபரப்பான காலிறுதி சுற்று நாளை தொடங்குகிறது. பாஸ்டன் அரங்கில் நடக்கும் முதல் காலிறுதியில் பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

ஏற்கனவே நடுவர்கள் அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பிரான்ஸ்-மொராக்கோ மோதும் போட்டிக்கு அர்ஜென்டினாவை சேர்ந்த நடுவர்களை நியமித்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

எப்படியாவது நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா கோப்பையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று ஃபிபா முன்கூட்டியே முடிவு செய்து அதற்கு ஏற்ப காய்களை நகர்த்துவதாகவும், நடப்பு உலக கோப்பை தொடரே சூதாட்டக் களமாக மாறிவிட்டதாகவும் சர்ச்சைகள் வெடிக்கின்றன. அதே சமயம் அர்ஜென்டினா-எகிப்து போட்டிக்கு பிரான்ஸ் நடுவர்களைத்தானே நியமித்தோம் என ஃபிபா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.