Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காரைக்குடியில் இரு பைக்குகள் அதிவேகமாக நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரி*ப்பு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முக்கிய வணிகப் பகுதியான கண்ணன் பஜார் பகுதியில் நள்ளிரவில் நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சித்திக் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் பைக்குகள் உருக்குலைந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவில் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த சித்திக் (வயது45) என்பவர் தனது பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். இதையடுத்து எதிர் திசையில் இருந்து மற்றொருவரும் அதிவேகமாக தனது பைக்கில் வந்துள்ளார். அப்போது வளைவு பகுதி ஒன்றில் எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் கட்டுப்பாட்டை இழந்து, கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த கோர விபத்தில் 2 பைக்குகளும் சுக்குநூறாக நொறுங்கின. இதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட சித்திக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ​மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பலத்த காயங்களுடன் அருகில் இருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காரைக்குடி நகரக் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்து அதிவேகம் காரணமாக நடந்ததா அல்லது கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்டதா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.