கோவை வஉசி மைதானத்தில் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை
Advertisement
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சொக்கலிங்கம் வீட்டில் இருந்து தனது மனைவியின் சேலையை எடுத்து கொண்டு வ.உ.சி மைதானத்திற்கு வந்தார். அங்கு உள்ள புங்கை மரத்தில் சேலையால் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து சொக்கலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், பணி சுமையா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement