யார் வற்புறுத்தலுக்கும் அடிபணியக்கூடாது நாட்டின் இறையாண்மைக்கு கூட்டு பாதுகாப்பு அவசியம்: ராஜ்நாத் சிங் பேச்சு
புதுடெல்லி: ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு தற்போது மலேசியாவிடம் உள்ளது. இதையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் இந்தியா நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
ஆசியான் இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் நேற்று பேசிய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “ இந்தோ பசிபிக் பகுதி வௌிப்டைத்தன்மையுடன் திறந்த நிலையிலும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எந்தவிதமான வற்புறுத்தலுமின்றியும் இருக்க வேண்டும் என இந்தியா நம்புகிறது. பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு தேசத்தின் இறையாண்மைக்கும் கூட்டு பாதுகாப்பே திறவுகோலாக உள்ளது. வருங்கால பாதுகாப்பு ராணுவத்திறன்களை மட்டுமே சார்ந்ததாக இருக்காது.” என்று தெரிவித்தார்.
