தென்னை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் தனி கவனம் செலுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
Advertisement
இதுதவிர, வறட்சி காரணமாக அழிந்து வரும் தென்னை மரங்களும் ஏராளம். இந்த நிலை நீடித்தால் தேங்காய் மட்டையில் இருந்து நாரை பிரிக்கும்போது கிடைக்கும் தேங்காய் மஞ்சை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு வந்துவிடும், இதன்மூலம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்க நேரிடும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேளாண் வல்லுநர்கள், தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் இதில் உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி, தென்னை மரங்கள் அழிவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement