Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

ஆஹா தேங்காய்!

இட்லிக்குச் சட்னி தயாரிக்கவோ, சமையலுக்காகத் தேங்காய் உடைக்கும்போதோ, அதிலிருக்கும் தேங்காய் நீரை சாப்பிடுவதில் சிறுவர்களுக்குள் போட்டியே நடக்கும். தேங்காய் உடைத்ததும் அதிலிருக்கும் தேங்காய்த் துண்டைச் சுவைக்காமல் இருப்பவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். சமையல் செய்யும்போது தேங்காயைத் துருவத் தொடங்கினால், சிறிதளவு தேங்காயை எடுத்து வாயில் போட்டுக் கொள்வது பலருக்கும் வழக்கம்தான்.

பொதுவாக, தேங்காயில் சுவை மட்டுமல்லாமல் ஏராளமான மருத்துவப் பயன்களும் உண்டு. குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் சுமார் 40 முதல் 50 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடும்போது இதயம், தலைமுடி, சருமம், வயிறு உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடும். தேங்காயைப் பச்சையாகச் சாப்பிடுவது செரிமானப் பிரச்னைகளைச் சமாளிக்கவும் உதவுகிறது. மேலும், உடலில் அதிகரிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் தேங்காய் உதவும்.

தேங்காய் நமது அன்றாட ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, அதைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்துக்குப் பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும்.

இதற்குக் கேரள மக்களின் வாழ்க்கை முறையையே உதாரணமாகச் சொல்லலாம். ‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் கேரளாவில், சமையலில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அங்கு பாரம்பரியமாகத் தேங்காய் எண்ணெய் சமையலுக்கும், தலைமுடி மற்றும் சருமப் பராமரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கேரளப் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் இயற்கையான பொலிவுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பொதுவாகவே கெமிக்கல் மாய்ஸ்ச்சுரைசர்களைவிட தேங்காய் எண்ணெய் சருமத்துக்கு மிகவும் நல்லது. மேலும் இயற்கையான பொலிவு மற்றும் வனப்பைக் கொடுக்கும்.