Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசுக்கு எதிரான கரப்பான் பூச்சி கட்சி பேரணிக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வரும் 5ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இந்தியா கேட் முதல் டெல்லி காவல்துறை தலைமையகம் வரை அமைதிப் பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜூலை 25ம் தேதி ஒன்றிய அரசு அளித்தவாக்குறுதி அளித்தபடி போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது நிறைவேற்றவில்லை எனக்கூறி இந்த பேரணி நடக்கிறது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ” அனுமதியின்றி போராட்டங்கள் நடத்தப்படுவதை தடுக்க வேண்டும். பேரணி நடைபெறும் அதே காலகட்டத்தில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்க உள்ளதால், சர்வதேசத் தலைவர்கள் வருகை தரும் வேளையில் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாநாடு முடியும் வரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணிக்கு எதிராக உடனடியாக அவசர உத்தரவோ அல்லது தடையோ பிறப்பிக்க முடியாது.

போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று முன்னதாவே எப்படி அனுமானிக்க முடியாது. அனைவரும் பொறுப்புடனும் அமைதியாகவும் சட்டத்திற்கு உட்பட்டும் நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் தங்களின் அச்சங்கள் மற்றும் குறைகள் குறித்துப் பேரணிக்கு முன் ஒன்றிய அரசிடம் தெரிவிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், சி.ஜே.பி. போராட்டங்கள் தொடர்பான நிலுவை மனுக்கள் அனைத்தையும் செப்டம்பர் 10ம் தேதிக்கு விரிவான விசாரணைக்கு எடுப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.