இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
