Clue என்பது பெண்களின் மாதவிடாய் காலம் மட்டும் அல்ல, அவர்களின் உடல் மற்றும் மனநிலையை முழுமையாக புரிந்துகொள்ள உதவும் ஒரு அறிவியல் அடிப்படையிலான செயலி. இந்தச் செயலியில் மாதவிடாய் வரக்கூடிய நாட்கள் முன்கூட்டியே கணிக்கப்படுவதால், வேலை, பயணம், முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை பெண்கள் சிரமமின்றி திட்டமிட முடிகிறது. தினசரி உடல் மாற்றங்கள், வயிற்று வலி, தலைவலி, சோர்வு, மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை பதிவு செய்யும் வசதி இருப்பதால், தங்களுக்கே உரிய மாதவிடாய் சுழற்சி எப்படி செயல்படுகிறது என்பதைக் காலப்போக்கில் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.இந்தச் செயலியில் அனைத்தும் அறிவியல் மற்றும் மருத்துவ அடிப்படையில் தான் தரவுகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் தொடர்ந்து உங்கள் உடல் மாற்றங்களை நீங்கள் இதில் பதிவிட உங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், எளிய பக்க விளைவுகள் இல்லாத வீட்டு மருத்துவ ஆலோசனைகளும் இந்த செயலியில் வழங்கப்படும். குறிப்பாக அவசர வாழ்க்கை, வேலை என நமக்கு நம் மாதவிடாய் சுழற்சியின் மாற்றங்கள், தேதிகளை கூட கவனிக்க முடியாது. இதனால் தேவையற்ற கர்ப்பம் உள்ளிட்டவைகளும் இதன் மூலம் தவிர்க்கப்படும்.
+
Advertisement
