Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மேகங்கள் இல்லாத ஐரோப்பா; கடுமையான புதிய வெப்ப அலை உருவாகும் அபாயம்.!!

பாரிஸ்: சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்களில் பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் மேகமின்றி காணப்பட்டதால், புதிய கடும் வெப்ப அலை உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் ஐரோப்பா வரலாறு காணாத வெப்பத்தை சந்தித்த நிலையில், மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவில் வானம் முற்றிலும் மேகமூட்டமின்றி தெளிவாக உள்ளதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. மேகங்களே இல்லாத இந்தப் பகுதி, இந்த வாரம் ஐரோப்பாவைத் தாக்கவிருக்கும் தீவிரமான மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெப்ப அலைக்கான ஒரு எச்சரிக்கை அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மீடியோசாட் தேர்ட் ஜெனரேஷன் (Meteosat Third Generation) செயற்கைக்கோளால் எடுக்கப்பட்ட இந்தப் படம், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அவற்றின் அண்டை பகுதிகளில் பரவலாகத் தெளிவான வானம் நிலவுவதை காட்டியது. பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் பிரான்ஸ், ஸ்பெயின், தெற்கு இங்கிலாந்து மற்றும் மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் நிலவிய வெயில் மற்றும் வெப்பமான வானிலையை வெளிப்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், இந்த செயற்கைகோள் புகைப்படம் ஐரோப்பா கண்டம் முழுவதும் மற்றொரு கடுமையான வெப்ப அலையை உருவாக்கும் அபாயத்தை கோடிட்டு காட்டும் வகையில் உள்ளதாக எச்சரித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் மீண்டும் வெப்பநிலை 43-44°C வரை உயர கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதே போல், தெற்கு இங்கிலாந்தில் வெப்பநிலை 36°C ஐ எட்ட கூடும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.