பணியிடங்கள் விவரம்
1. சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் (ஆர்டினரி கிரேடு)- தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. லோயர் டிவிசன் கிளார்க்: தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. இந்தி டைப்பிஸ்ட்: தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரரின் உடற்தகுதி, தொழிற்திறன் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு/ரீசனிங்/ஆங்கில மொழி ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
www.indianairforce.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2026.



