பணியிடங்கள் விவரம்:
1. லைப்ரரி இன்பர்மேஷன் அசிஸ்டென்ட்: 2 இடங்கள். தகுதி: நூலக அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (பீல்டு/லேப் ரிசர்ச்): 4 இடங்கள். வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: தாவரவியல்/விலங்கியல்/வனவியல்/சுற்றுச்சூழலியல்/எக்கோலஜி/ பயோ டெக்னாலஜி/ஜெனிடிக்ஸ்/ மைக்ரோபயாலஜி/ ஜியாலஜி/ பயோ கெமிஸ்ட்டிரி பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. ஸ்டெனோகிராபர் கிரேடு-2: 2 இடங்கள். வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி அல்லது ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதி அதை கம்ப்யூட்டரில் விரிவாக டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
4. டெக்னீசியன் (பீல்டு/லேப் ரிசர்ச்): 11 இடங்கள். வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. ஸ்டோர்கீப்பர்: 3 இடங்கள். வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. டெக்னீசியன்: (மெயின்டெனன்ஸ்): 9 இடங்கள். வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. லோயர் டிவிசன் கிளார்க்: 8 இடங்கள். வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள் அல்லது இந்தி 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
8. பாரஸ்ட் கார்டு: 7 இடங்கள். வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. பல்நோக்கு பணியாளர்: 45 இடங்கள். வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.1500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.700/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.fri.icfre.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று. (03.06.2026).



