புதுக்கோட்டை: வடகாட்டில் இருதரப்பினரிடையே மோதல் என்பது தவறான செய்தி என புதுக்கோட்டை போலீஸ் தகவல் அளித்துள்ளனர். மதுபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் என விசாரணையில் தெரிகிறது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வதந்திகளை நம்ப வேண்டாம், வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டுக்கு தீ வைப்பு, 5 பேருக்கு வெட்டு, பேருந்து கண்ணாடி உடைப்பு, போலீஸ் காயம் என வதந்தி பரவியுள்ளது. பெட்ரோல் பங்க்கில் யார் முதலில் பெட்ரோல் போடுவது என்பதில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டும், அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.