Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிட்டி ஓபன் டென்னிஸ் டெய்லர் பிரிட்ஸ் அலெக்சாண்டர் சாம்பியன்

வாஷிங்டன்: சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் பிரிவில் டெய்லர் பிரிட்ஸ், பெண்கள் பிரிவில் அலெக்சாண்டர் ஈலா ஆகியோ சாம்பியன் பட்டம் வென்றனர். சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதினார். முதல் செட்டை 6-4 என்று ஜெசிகா கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்களை 6-4, 6-0 என்ற கணக்கில் அலெக்சாண்டர் ஈலா கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் ஜூலியன் காஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் நியூசிலாந்தின் எரின் ரவுட்லிஃப், இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடியும் சாம்பியன் பட்டம் வென்றது.