சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் பெகுலா, முகாவா
வழக்கம் போல் முன்னணி ஆட்டக்காரர்கள் நேரடியாக 2வது சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நேற்று அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா(31வயது, 4வது ரேங்க்)- ஆஸ்திரேலியா வீராங்கனை கிம்பெர்லி பிர்ரெல்(27வயது, 82வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் பெகுலா 6-4, 6-3 என நேர் செட்களில் மணி நிமிடங்களில் வெற்றிப் பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முகோவா(28வயது, 14வது ரேங்க்)), பிரான்சின் காரோலின் கார்சியா(31வயது, 201வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். இரு தரப்பும் வெற்றிக்காக கடுமையாக போராடியதால் 2 செட் ஆட்டங்களுக்கும் டை பிரேக்கர் வரை நீண்டது. எனினும் கூடுதல் வேகம் காட்டிய முகோவா அவற்றை 7-6(7-3), 7-6(7-0) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பபற்றினார். எனவே 2 மணி 6நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 2-0 என நேர் செட்களில் கைப்பற்றிய முகாவா 3வது சுற்றுக்குள் நுழைந்தாரர்.
அதேபோல் கோகோ காஃப்(அமெரிக்கா), ஜாஸ்மின் பாலினி(இத்தாலி), பார்போரா கிரெஜ்சிகோவா(செக் குடியரசு), யெலனா ஆஸ்டபென்கோ(லாத்வியா) ஆகியோரும் நேற்று 3வது சுற்றுக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(ெஜர்மனி), பென் ஷெல்டன், ரெய்லி ஒபெல்கா(அமெரிக்கா), கார்லோஸ் அல்கராஸ்(ஸ்பெயின்), ஆந்த்ரே ரூபலேவ்(ரஷ்யா) ஆகியோரும் 3சுற்றில் விளையாட இருக்கின்றனர்.