Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: ரவுண்ட் ஆப் 16ல் கிடாம்பி

ஷென்ஷென்: சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தய சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். முன்னாள் நம்பர் 1 வீரரான கிடாம்பி (33 வயது), முதல் சுற்றில் தைவானின் சி யு ஜென்னுடன் நேற்று மோதினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த கிடாம்பி 21-16, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். காலிறுதிக்கு முந்தய சுற்றில் கனடாவின் விக்டர் லாய் சவாலை கிடாம்பி சந்திக்கிறார்.

சீனா மாஸ்டர்ஸ் தொடரில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரர் லக்‌ஷியா சென் 14-21, 17-21 என்ரா நேர் செட்களில் விக்டர் லாயிடம் போராடி தோற்றது குறிப்பிடத்தக்கது. கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா - தனிஷா கிராஸ்டோ இணை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.