Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்காவில் தடை

ஹாங்காங்: தேசிய பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி, வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்கள், 4 கால்கள் கொண்ட ரோபோ நாய்கள் மற்றும் சில மின்சார உபகரணங்களை அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்ய அமெரிக்க அரசின் தகவல் தொடர்பு ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை முக்கியமாக சீனாவை குறிவைத்து எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

உலகளவில் மனித உருவ ரோபோ உற்பத்தியில் சீனா சுமார் 85 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. 2030-க்குள் சீனாவின் ரோபோ சந்தை 15 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தடை, அமெரிக்கா, சீனா தொழில்நுட்பப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சீனாவின் உள்நாட்டு உற்பத்தித் திறன் மற்றும் பிற ஏற்றுமதி சந்தைகள் காரணமாக அதன் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் அவர்கள் மதிப்பிடுகின்றனர்.