Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சீனாவின் Sichuan மாகாணத்தை நள்ளிரவில் அதிர வைத்த நிலநடுக்கம்.! அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

சிச்சுவான்: வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான இரட்டை நிலநடுக்கங்கள் உலகளவில் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் மறையாத நிலையில், சீனாவின் முக்கிய மாகாணம் ஒன்றில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யிபின் நகரின் காவோசியான் கவுண்டியில், சுமார் 6 முதல் 10 கி.மீ வரையிலான ஆழத்தில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் செங்டு மற்றும் சோங்கிங் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டன.

சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை 12:12 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது. சீனா நிலநடுக்க நெட்வொர்க்ஸ் மையம் (CENC) வழங்கிய தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 6 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், 13 பேர் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 196 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தை அடுத்து உள்ளூர் நிர்வாகம் மற்றும் சீன நிலநடுக்க வாரியம் உடனடியாக லெவல்-III அவசரகால மீட்பு நடவடிக்கையை தொடங்கி, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.