Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சில்லிபாயின்ட்...

* அட்லான்டா அரங்கில் நடந்த கே பிரிவு போட்டியில் காங்கோ 3-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது.

* பிலடெல்பியாவில் குரோஷியா கானா மோதிய எல் பிரிவு லீக் ஆட்டத்தில் குரோஷியா 2-1 என போராடி வென்றது.

* நியூ ஜெர்சி அரங்கில் நடந்த எல் பிரிவு போட்டியில் இங்கிலாந்து 2-0 என பனாமாவை வீழ்த்தி இப்பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. பெல்லிங்காம் (62’), நட்சத்திர வீரர் ஹாரி கேன் (67’) கோல் போட்டனர்.

* ஆப்ரிக்கா 9/10!

நடப்பு பிபா உலக கோப்பை தொடருக்கு இதுவரை இல்லாத அளவாக 10 ஆப்ரிக்க அணிகள் தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்திருந்த நிலையில், அவற்றில் 9 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளன.

மொராக்கோ, தென் ஆப்ரிக்கா, செனகல், ஐவரி கோஸ்ட், கானா, கேப் வெர்டே, எகிப்து, காங்கோ, அல்ஜீரியா அணிகள் ரவுண்ட் ஆப் 32ல் முன்னணி அணிகளுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றன. துனிசியா மட்டுமே லீக் சுற்றுடன் வெளியேறி உள்ளது.

* 3ல் சிறந்த 8!

நடப்பு உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 48 அணிகள் 12 பிரிவுகளாக மோதின. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த 24 அணிகள் மற்றும் 3வது இடம் பிடித்த 12 அணிகளில் இருந்து முதல் 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. 3வது இடம் பிடித்தும் ஈரான், தென் கொரியா, ஸ்காட்லாந்து, உருகுவே அணிகள் துரதிர்ஷ்டவசமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின. ஒவ்வொரு பிரிவிலும் 4வது இடம் பிடித்த அணிகளும் வெளியேற்றப்பட்டன.

* ரொனால்டோ ஏமாற்றம்

கே பிரிவில் கொலம்பியா போர்ச்சுகல் மோதிய லீக் ஆட்டம் 0-0 என எத்தரப்பும் கோல் அடிக்காத நிலையில் டிரா ஆனது. போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துடன் மீண்டும் விமர்சனக் கணைகளை எதிர்கொண்டு வருகிறார். ரவுண்ட் ஆப் 32ல் போர்ச்சுகல் குரோஷியா மோதும் போட்டி டொரான்டோவில் ஜூலை 3ம் தேதி அதிகாலை 4.30க்கு தொடங்குகிறது.

* அல்ஜீரியா ஆஸ்திரியா டிரா

கன்சாஸ் சிட்டி அரங்கில் அல்ஜீரியா ஆஸ்திரியா மோதிய ஜே பிரிவு லீக் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இரு அணிகளும் கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் கடுமையாகப் போராடிய நிலையில், இப்போட்டி 3-3 என டிராவில் முடிந்தது. ஆஸ்திரியா தரப்பில் மார்கோ (28’), மார்செல் (55’), சாசா (90’+6’) கோல் அடிக்க, அல்ஜீரியா சார்பில் பெல்காலி (45’), ரியாத் மாரெஸ் (60’ மற்றும் 90’+3’) கோல் போட்டனர். ஜே பிரிவில் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் முறையே 2வது, 3வது இடங்களைப் பிடித்து ரவுண்ட் ஆப் 32ல் நுழைந்தன.