Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சில்லி பாய்ன்ட்...

 இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டு இருந்த இடை நீக்கத்தை, ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. ‘இது 99.90சதவீதம் பேருக்கு மகிழ்ச்சியை தரும்’ என்று பாலியல் குற்றசாட்டுகளால் கூட்டமைப்பு தலைவர் பதவியை இழந்த பாஜக பிரமுகர் பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார்.

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சையத் அபித் அலி(83) நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு பிசிசிஐ, வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் ரொனால்டோ நேற்று முன்தினம் இரவு, போதிய ஒத்துழைப்பு இல்லாததால், பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்று சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார்.

 வங்கதேசத்தின் பிரபல கிரிக்கெட் வீரர் மகமதுல்லா(39), சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். அவர் வங்கத்துக்காக 239ஒருநள், 50டெஸ்ட், 141 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

அசத்திய ஜோதி, மனோஜ்

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பார தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டி புது டெல்லியில் நடக்கிறது. அதில் 400மீட்டர் சக்கர நாற்காலி பந்தயத்தின்(டி54) பைனலில் இந்தியா சார்பில் களம் கண்ட தமிழ்நாடு வீரர்கள் ஜோதி மணிகண்டன், மனோஜ் சபாபதி இருவரும் முதல் 2 இடங்களை பிடித்து அசத்தினர்.

ஆலோசனை வேண்டாம்.. ஆதரவு போதும்..

ஐபிஎல் தொடரில் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன், ‘அணியில் உள்ள 13வயதான வைபவ் திறமையானவர். அவர் ஆட்டத்தை பார்த்து வியந்திருக்கிறேன். வைபவுக்கு மட்டுமின்றி இளம் வீரர்கள் தன்னம்பிக்கை அதிகம். துணிச்சலானவர்கள். இன்றைய சூழ்நிலையையும், கிரிக்கெட்டின் அடையாளத்தை புரிந்து வைத்து இருக்கிறார்கள். எனவே அவருக்கு ஆலோசனை சொல்வதை விட, அவரது பலங்களை புரிந்துக் கொண்டு ஒரு மூத்த சகோதரனைப் போல் ஆதரிப்பதுதான் முக்கியமானது’ என்று கூறியுள்ளார்.

இணைந்தனர் சாம்பியன்கள்

ஐபிஎல் தொடருக்காக திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் கடந்த 18 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ஜஸ்பிரித் பும்ரா பயிற்சி முகாமில் இணைந்தார். இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பயிற்சியில் இணைகின்றனர்.

உறுதி செய்த வீரர்கள்

பிரபல கால்பந்து கிளப்களான ஸ்பெயினின் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் ஆகியவையின் முன்னாள் வீரர்கள் மோதும் காட்சி கால்பந்து போட்டி ஏப்.6ம் தேதி நவி மும்பையில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதை முன்னாள் ஜாம்பவான்கள் லூயிஸ் ஃபிகோ, கார்லஸ் புயோல், ரிகார்டோ குவாரெஸ்மா, ஃபெர்னாண்டோ மோரியன்ட்ஸ் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.