தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சில்லி பாய்ன்ட்...

* கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா தகுதி

Advertisement

பனாஜி: அடுத்தாண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்க, ஃபிடே சர்க்யுட் 2025 முறைப்படி, சென்னையை சேர்ந்த, இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஒரே இந்தியர் இவரே. கேண்டிடேட்ஸ் போட்டியில் வெல்பவர், அடுத்த உலக சாம்பியன் பட்டத்துக்காக, நடப்பு உலக சாம்பியன் குகேஷுடன் மோதுவார்.

* பிரசிடென்ட் செஸ் நிஹல் சரீன் முன்னிலை

தாஷ்கென்ட்: பிரசிடென்ட் கோப்பைக்கான மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் நிஹல் சரீன் பங்கேற்று ஆடி வருகிறார். 4 சுற்றுகள் முடிவில் 3 புள்ளிகள் பெற்றுள்ள அவர் முதலிடம் வகிக்கிறார். தவிர, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர்கள் சம்சிதீன் வோகிடோவ், முகிதீன் மேடமினோவ் ஆகிய இருவரும் தலா 3 புள்ளிகளுடன் முதலிடங்களில் உள்ளனர். அவர்களுக்கு பின், ஷான்ட் சார்க்ஸ்யான், பார்ட்யா டேனெஸ்வர் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இப்போட்டி முக்கியமான கட்டமான 5வது சுற்றுக்கு செல்ல உள்ளது.

* வேல்ஸை வீழ்த்தி இந்தியா அசத்தல்

சான்டியாகோ: சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் எப்ஐஎச் மகளிர் ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் இந்தியா - வேல்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய இந்திய வீராங்கனைகள் 3 கோல்கள் போட்டனர். மாறாக, வேல்ஸ் அணி ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. அதனால், 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, இன்று நடக்கும் போட்டியில் உருகுவே அணியுடன் இந்தியா மோதவுள்ளது. அதில் வெற்றி பெறும் அணி, 9ம் இடத்துக்கான போட்டியில் கலந்து கொள்ளும்.

* விஜய் ஹசாரே கிரிக்கெட் கோஹ்லி, ரோகித் பங்கேற்பு

புதுடெல்லி: உள்நாட்டில் ஆடப்படும் விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரர்கள் ரோகித் சர்மாவும், விராட் கோஹ்லியும் கட்டாயம் ஆட வேண்டும் என வலியுறுத்தவில்லை என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கூறியுள்ளது. இருப்பினும், விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் பங்கேற்பதாக, ரோகித்தும், கோஹ்லியும் உறுதி செய்துள்ளனர். இது குறித்து, பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதென, ரோகித்தும், கோஹ்லியும் அவர்கள் விருப்பப்படி முடிவு செய்துள்ளனர். இந்த விஷயத்தில் பிசிசிஐ அவர்களை வலியுறுத்தவில்லை’ என தெரிவித்தனர்.

Advertisement

Related News