சில்லி பாயின்ட்
* ஜிம்பாப்வே சென்றுள்ள ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் செப். 15, 18, 20 தேதிகளில் நடைபெற உள்ளன.
Advertisement
* நமீபா அணியுடன் விந்தோயக் அரங்கில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. நமீபியா 36.2 ஓவரில் 156 ரன்னுக்கு ஆல் அவுட். தென் ஆப்ரிக்கா 21.3 ஓவரில் 157/1 (ஜார்டன் ஹெர்மான் 77, கானார் எஸ்டர்ஹுசன் 68*, டிவால்ட் பிரெவிஸ் 6*).
Advertisement