குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுடன் காலை உணவு: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு
ஆவடி: திருமுல்லைவாயலில் உள்ள அரசு பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அப்பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் சா.மு.நாசர் அமர்ந்து, காலை உணவை சாப்பிட்டார். இதில் ஆவடி மாநகராட்சி மேயர், ஆணையர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இன்று காலை அப்பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் சா.மு.நாசர் அமர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்த காலை உணவு திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட காலை உணவை சாப்பிட்டார். அவருடன் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையர் சரண்யா, மாநகர செயலாளர் சண்பிரகாஷ், மண்டல தலைவர் அமுதா பேபிசேகர், பகுதி செயலாளர்கள் பேபிசேகர், பொன் விஜயன், வழக்கறிஞர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.
Advertisement