Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில் நிலையங்களில் 9000 குழந்தைகள் மீட்பு: ரயில்வேயின் மனிதநேயப் பணி!

டெல்லி: இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மற்றும் குழந்தைகள் நலக் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட சிறப்புப் பணிகளின் மூலம், நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களிலிருந்து சுமார் 9,000 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள், அல்லது ஆபத்தில் சிக்கியவர்கள் போன்ற குழந்தைகள் ரயில் நிலையங்களில் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவியை வழங்கி, அவர்களைக் குழந்தைப் பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்கும் மகத்தான பணியை ரயில்வே தொடர்ந்து செய்து வருகிறது.