Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன் நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய், வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக் காலை உணவுத் திட்டம், அன்புக்கரங்கள், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், ‘தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021’ என குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் எனது குழந்தைகள் நாள் நல்வாழ்த்துகள்.

உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்.