உளுந்தூர்பேட்டை: தமிழ்நாட்டில் தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போவது கவலை அளிக்கிறது என்று சண்முகம் கூறினார்.
உளுந்தூர்பேட்டையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை, எண்ணைய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஏழை மக்களுக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் செலவு செய்யும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குழந்தைகள் காணாமல் போவது எல்லோருக்கும் கவலை அளிக்கிறது. தமிழக அரசும் காவல்துறையும் காணாமல் போன குழந்தைகளை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் இன்னமும் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்’’ என்றார்.


