கை, கால்களை கட்டி சாக்குப்பையில் வைத்து வாஷிங் மெஷினில் போட்டு குழந்தை கொடூர கொலை: சொத்து பிரச்னையில் பெண் வெறிச்செயல்
தொடர்ந்து போலீசார் தங்கம்மாளின் வீட்டில் சோதனை செய்த போது 3 வயது குழந்தை சஞ்சீவை அங்குள்ள வாஷிங்மெஷினிலிருந்து சாக்குப்பையில் சடலமாக மீட்டனர். குழந்தையின் சடலத்தை பார்த்து பெற்றோரான விக்னேஷ், ரம்யா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது போலீசிடமிருந்த தப்ப முயன்ற தங்கம்மாளை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், தங்கம்மாள் குழந்தையின் கைகளையும், கால்களையும் கட்டி சாக்குமூட்டையில் சுற்றி வாஷிங் மெஷினில் போட்டதில் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்துள்ளது. குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காட்டிக்கொடுத்த குழி: சிறுவனை கொலை செய்த தங்கம்மாள் உடலை இரவில் யாருக்கும் தெரியாமல் புதைத்து விடலாம் என்று வீட்டின் பின்புறத்தில் தென்னை மரம் அருகில் குழி தோண்டி வைத்துள்ளார். காணவில்லை என புகார் வந்ததும் போலீசார் தங்கம்மாள் வீட்டில் தேடியபோது அங்கிருந்த குழி அவரை காட்டிக்கொடுத்துள்ளது.