Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2026-27ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 4 வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் நடைபெறுகின்றன. சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள, இதுவரை இல்லாத அளவிற்கு 26,38,267 வீரர், வீராங்கனைகள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பான ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டுகளில் பங்கு கொள்வதற்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.7 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தோம். அதன்படி இன்று ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொள்ளும் 36 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2.52 கோடி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.