Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 20 -ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 24 -ம் தேதிவரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டத்துக்கான செலவுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 18 தொழில் நிறுவனங்களுக்கு விரிவாக்கம், முதலீடு, சலுகைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று உள்ளனர்.