தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீண்டும் முதல்வர் ஆவார் மு.க.ஸ்டாலின்: வைகோ திட்டவட்டம்

 

Advertisement

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது; இந்திய இறையாண்மையை அடகு வைப்பது போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு கொத்தடிமையாக ஆக்கிவிட்டார் மோடி. இந்த குற்றச்சாட்டை மக்களவையில் பதிவு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டை நான் அப்படியே வழிமொழிகிறேன். திராவிட இயக்கத்தை பாதுகாக்க, பாஜக பின்புல முயற்சியுடன் இந்துத்துவ, சனாதான சக்திகள் தமிழகத்தில் நுழைவதை வீழ்த்துவதற்கும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வளர்த்த சமூக நீதியை நிலைநாட்டவும்தான் கடந்த 8 ஆண்டிற்கு முன் திமுக உடன் மதிமுக கூட்டணி அமைத்தது.

வரும் தேர்தலிலும் இந்த கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகின்ற முதல்வர் ஸ்டாலின் இந்த தேர்தலுக்கு பின்னரும் மீண்டும் முதலமைச்சராக ஆட்சி அமைப்பார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடி விட்டு, தேசிய கீதம் பாட வேண்டும் என்று பாஜ அரசு உத்தரவிட்டுள்ளது. இது எச்சரிக்கை மணி. அடுத்து டெல்லிக்கு இந்திரபிரசாத் என்று வேறு பெயர் வைக்க வேண்டும், தலைநகரை வாரணாசிக்கு மாற்ற வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ சக்திகளிடம் திட்டம் மற்றும் உள்நோக்கம் இருக்கிறது. எல்லாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

திமுக வெற்றிக்கு எப்படி நான் ஒரு காலத்தில் முழு மூச்சாக பாடுபட்டேனோ, இப்போதும் அதே உணர்வுடன் பாடுபடுவேன் என்றார்.

Advertisement

Related News