"நலம் காக்கும் ஸ்டாலின்" முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை : நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, "நலம் காக்கும் ஸ்டாலின்" முகாம்களுக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்திட வேண்டும், "நலம் காக்கும் ஸ்டாலின்" முகாம்களுக்கு வருகை தரும் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிட போதுமான தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும், முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து, மக்களுக்கு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்," என முதல்வர் அறிவுறுத்தினார்.

