Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உன் சமையலறையில் சிக்கனா? மட்டனா?

ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு இல்லத்திலும் அசைவ உணவின் வாசனை வீடு எங்கும் மணம் பரப்பும். பக்கத்து வீட்டில் ஒருவேளை விரதம் எனில் ஜன்னல் வழியே வாசம் போய் விடக்கூடாது என்பதற்காக சாம்பிராணி புகையினால் வாசத்தை கட்டுப்படுத்துவார்கள்.

உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்ட சத்துக்களில் புரதம் மிக முக்கியம். அசைவ உணவை பொறுத்தவரை ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி இவை இரண்டிலும் புரதம் இருந்தாலும் எதனை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்கிற சந்தேகம் எப்போதும் நமக்குண்டு. இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் ஓர் ஆய்வு வெளியிட்டுள்ளது.

ஆட்டிறைச்சி கொழுப்பை உட்கொள்வது அதிக கலோரிகள் உடலில் சேருவதற்கு வழி வகுக்கும். அத்துடன் குளுக்கோஸ் டிரைகிளிசரைடுகள் கொழுப்பு இவற்றின் செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். புரதத்தை கணக்கிடும் போது ஆட்டிறைச்சியின் கொழுப்பின் அளவே அதிகமாக இருக்கிறது. கோழி இறைச்சியை பொறுத்த மட்டில் உடல் உறுப்புகளுக்கேற்ப கலோரி அளவுகள் மாறுபடும். குறிப்பாக கோழியின் மார்பகங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. அதற்கு அடுத்தபடி இறக்கைகள் தொடைப் பகுதியில் அதிக கலோரிகள் உள்ளன. இருப்பினும் கோழி இறைச்சியைவிட ஆட்டிறைச்சியில் தான் கலோரிகள் அதிகம். ஆட்டிறைச்சியில் கொழுப்பின் அளவு அதிகம் இருப்பது தான் அதற்கு காரணம். அதாவது 100 கிராம் ஆட்டிறைச்சியில் 230 முதல் 300 வரை கலோரிகள் இருக்கும். ஆனால் கோழி இறைச்சியில் மார்பு பகுதியில் தோல் இல்லாத நிலையில் 165 கலோரிகள் இருக்கும்.

அதே போன்று கோழியின் மார்பக பகுதியில் 100 கிராமுக்கு 31 கிராம் புரதம் இருக்கும். ஆனால் ஆட்டிறைச்சியில் 25 கிராம் புரதமே உள்ளடங்கி இருக்கும்.

தேசிய சிக்கன் கவுன்சிலின் ஆய்வுப்படி கோழி இறைச்சியில் மெலிந்த புரதம் காணப்படும். அதிக கொழுப்பு இருக்காது. இது உணவு கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு நன்மை தரும். மேலும் கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. இது இதயம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு நல்லது.

எனவே ஆரோக்கிய நன்மைகளை பொறுத்தவரை ஆட்டிறைச்சியை விட கோழி இறைச்சி முதன்மையானது. அரை உணவு உட்கொள்வதில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் சாப்பிட ஆவல் கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக திருமண விழா மற்றும் காதணி விழா மொய் விருந்து விழாக்களில் கலந்து கொள்ளும் ஆண்கள் சைவமா… அசைவமா என சமையற்கலைஞர்களிடம் மெனு கார்டு வாய்ஸ் கிடைத்த உடன் தான் மண்டபத்திற்குள்ளே நுழைகின்றார்கள். பெண்கள் அப்படியல்ல. எது எப்படியோ பசிக்கு உணவு கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கின்றார்கள்.

என்கையில் சிக்கன் கொஞ்சம் அதிகமாக வைக்கலாம்.

ஆட்டிறைச்சியை விட கோழி இறைச்சி முதன்மையான உணவாக இருந்தாலும் இரண்டையும் சரி நிகர் சம நிலையில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அடிக்கடி சாப்பிடுவதற்கு கோழி இறைச்சியே ஏற்றது. அதே சமயம் நான்கு வாரங்களில் ஒரு வாரம் மீன், அடுத்து கடல் உணவுகள், ஒரு வாரம் ஆட்டிறைச்சி, ஒரு வாரம் கோழி, அதிலும் நாட்டுக் கோழி எனில் இன்னும் சிறப்பு. ஏனெனில் பிராய்லர் கோழி நல்லதா? கெட்டதா? என்பது தனி தலைப்பில் விவாதிக்க வேண்டிய விஷயம் . எதுவானாலும் அளவுக்கு பிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். மாதத்தில் ஒரு ஞாயிறு சைவம் கூட கடைபிடித்து, அன்றைய தினம், காய்கறிகள், பழங்கள் என சைவ சிறப்பு சண்டேவாகக் கூட கடைபிடிக்கலாம். அதிலும் பனீர், காளான், புரோக்கலி, போன்ற ஊட்டச்சத்து நிறைந்த சைவ ஞாயிறு எனில் இன்னும் சிறப்புதான்.

- ஆ.ஜெயசீலிராணி.