Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் ரூ.65 கோடியில் ஹஜ் இல்லம் முதல்வரை நேரில் சந்தித்து மாநில ஹஜ் குழுவினர் நன்றி

சென்னை: சென்னை நங்கநல்லூரில் ரூ.65 கோடியில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்தமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில் நேரில் சந்த்து மாநில ஹஜ் குழுவினர் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல் சமத் மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர்கள் பாத்திமா அகமது, எம்.தாவூத் பீ, மௌலானா குலாம் முகமது மெஹ்தி கான், ஏ.முகம்மது அஷ்ரப்,

ஏ.அப்சல், குணங்குடி ஆர்.எம்.அனிஃபா, மற்றும் மாவட்ட காஜிகள் ஆகியோர் சந்தித்து, நாகப்பட்டினத்தில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2023ம் ஆண்டு முதல், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இக்குழுவால் 159 கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து சான்றிழ்கள் பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள்- டாக்டர். அசார் ஷரிப் (மீயாசி கல்லூரி), ஹாஜி டாக்டர் ஏ.கே. காஜா நஜிமுதீன் (ஜமால் முகமது மியாசி கல்லூரி), தவ்ஃபிக் அகமது (அன்னை கதிஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி) ஹபிஸ் வாவு சார் அகமது இஸ்ஹாக் அஜாரி, (வாவு வஜீஹா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி), ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவஹிருல்லா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் கலந்து கொண்டனர்.