சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டம்
சென்னை: சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் மின்சார வாகன பயன்பாட்டை அடுத்து பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. 2 சக்கரம், 3 சக்கரம், 4 சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் சார்ஜிங் செய்யும் வசதி செய்யப்பட உள்ளது.
