Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ரூ.33.85 கோடி செலவில் 11 முதல்வர் படைப்பகம், நவீன நூலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.33.85 கோடி செலவில் 11 முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நவீன நூலகங்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.10.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டரங்கம், சென்னை நடுநிலை பள்ளி கட்டிடம் மற்றும் அம்பேத்கர் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலை கடைகள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, அசோக் நகரில் 7,874 சதுர அடி கட்டிட பரப்பளவில் ரூ.12.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த படைப்பகத்தின் சுற்றுப்புறத்தில், திறந்தவெளி அரங்கம், அவசரகால வெளியேறும் வழி, 16,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத்தள நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அசோக்நகர் முதல்வர் படைப்பகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓட்டோரி, சுப்புராயன் தெருவில் ரூ.3.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், ஜமாலியா, மங்களபுரத்தில் ரூ.2.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், புளியந்தோப்பு, வெங்கடேசபுரத்தில் ரூ.1.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், பட்டாளம், பக்தவச்சலம் பூங்காவில் ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்;

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி, மேயர் பாசுதேவ் தெருவில் ரூ.1.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்; எழும்பூர் சட்டமன்ற தொகுதி, சூளை, ராட்லர் தெருவில் ரூ.82 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்; பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, எருக்கஞ்சேரியில் ரூ.1 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்;

ராயபுரம் சட்டமன்ற தொகுதி, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவிடத்தில் ரூ.1.56 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி, ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.3.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் என 9 முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகங்கள்;

துறைமுகம் சட்டமன்ற தொகுதி, கொண்டித்தோப்பு, அம்மன் கோயில் தெருவில் ரூ.4.24 கோடி செலவில் சென்னை நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் என மொத்தம் ரூ.16.87 கோடி செலவில் 9 முதல்வர் படைப்பகங்கள் கொண்ட நவீன நூலகங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.24 கோடி செலவில் 1 முதல்வர் படைப்பகம் கொண்ட நவீன நூலகம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

திரு.வி.க. நகர் மண்டலம், ராஜா தெருவில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.34.70 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் கூட்டுறவு பண்டகச்சாலை நியாய விலை கடைகளை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், ரூ.2.97 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டு அரங்கம், ரூ.7.64 கோடி செலவில் சென்னை நடுநிலை பள்ளி கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா, எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் ஜெ.கருணாநிதி, ஆர்.டி.சேகர், தாயகம் கவி, ஜெ.ஜெ.எபிநேசர், இ.பரந்தாமன், துணை மேயர் மகேஷ்குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளி கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.