தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமானநிலையத்தில் பனிமூட்டம்; 14 விமானங்களின் வருகை புறப்பாட்டில் தாமதம்: பயணிகள் அவதி

Advertisement

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக, 10 விமானங்களின் புறப்பாடு மற்றும் 4 விமானங்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அவ்விமானங்களில் இருந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக காலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், பகலில் வெயிலில் அதிகரிப்பு என பருவநிலை மாறுபட்ட நிலையில் காணப்பட்டது. இந்த பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு வார காலமாக காலை நேர விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தன. அதேபோல், சென்னை விமானநிலையத்தை சுற்றிலும் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவியது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக, இன்று காலை புறப்படும் சிங்கப்பூர், துபாய், பக்ரைன், அபுதாபி, மஸ்கட், கொல்கத்தா, சூரத், விஜயவாடா, புவனேஸ்வர், அந்தமான் ஆகிய 10 விமானங்களின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல் மஸ்கட், கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்பட 4 இடங்களில் இருந்து சென்னை வரும் 4 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்களின் வருகை, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டன. இவ்விமானங்கள் அனைத்தும் பனிமூட்டம் காரணமாக சுமார் ஒரு மணி வரை தாமதமாக இயக்கப்பட்டன.

இதையடுத்து, சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை வரும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடந்த ஒரு வார காலமாக குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனினும், இன்று சென்னைக்கு வரும் விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடும் அளவுக்கு பெரிதளவில் பனிமூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News