தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் இருந்து 4 உள்நாடு, 2 சர்வதேச விமான சேவை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

Advertisement

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து 4 உள்நாடு, 2 சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் கடற்கரை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமான, புகட் நகருக்கு சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமானத்தை, தாய் ஏர் ஏசியா விமானம் நிறுவனம், புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு என வாரத்தில் 3 நாட்கள் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அதைப்போல் ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியா தலைநகர் அடீஸ் அபாபாவுக்கு, சென்னையில் இருந்துவாரத்தில் 3 நாட்கள், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்திற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. கூட்டமும் அதிகமாக இருப்பதால், இந்த விமானம் வாரத்தில் 4 நாட்கள், சென்னையில் இருந்து அடிஸ் அபாபாவிற்கு இயக்கப்படுகிறது. விரைவில் இந்த விமானம், தினசரி விமானமாக இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதைப்போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னை-கோவா-சென்னை இடையே புதிதாக இன்று முதல் தினசரி விமானத்தை இயக்க தொடங்கியுள்ளது. மேலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னை- ஜெய்ப்பூர்- சென்னை இடையே, புதிதாக தினசரி விமானத்தையும், சென்னை-புனே-சென்னை இடையே, இன்று முதல் புதிதாக மற்றொரு தினசரி விமானத்தையும் இயக்க தொடங்கியுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், குஜராத் மாநிலம் வதோதராவிற்கு, சென்னை-வதோதரா-சென்னை இடையே புதிதாக வாராந்திர விமான சேவையை தொடங்கியுள்ளது. சென்னையில் 4 புதிய உள்நாட்டு விமான சேவைகளும், சர்வதேச முனையத்தில், 2 புதிய விமான சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது, பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News