சென்னை: சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் தனியார் பள்ளி பேருந்து மோதி தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மற்றும் மகள் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தேவி அவரது மகள் சுவாதி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊரப்பாக்கம் பகுதியில் சென்ற பொது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கீழே விழுந்த தேவி மற்றும் அவரது மகள் சுவாதி மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், சுவாதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.



