சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
இதையடுத்து வாரத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் தங்கம் அதிரடியாக குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.14,505க்கும், பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 16,040க்கும் விற்றது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று முன்தினம் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 2.60 லட்சத்துக்கும் விற்பனையானது.
இதற்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.



