சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மீனவ பிரதிநிதிகள் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில்; பட்டினப்பாக்கத்தில் மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தவெக வாக்குறுதி அளித்திருந்தது. எந்த வித ஆய்வும் நடத்தாமல் தலைமைச் செயலகம் கட்டுவதாக அறிவித்தது ஏன்? என்றும் அரசு அதிகாரிகள் முதல்வருக்கு தவறான தகவல் அளித்தனரா என்றும் மீனவ பிரதிநிதி கேள்வி எழுப்பினர்.
பட்டினப்பாக்கத்தை முதல்வர் விஜய் நேரில் வந்து பார்க்க வேண்டும். புதிய தலைமைச் செயலகம் குறித்து முதல்வர் விஜய் வாய் திறக்க வேண்டும். தலைமைச் செயலகத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மீனவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்றும் பட்டினப்பாக்கத்தில் பழைய குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விட்டது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். மீனவர்களுக்கு எதிராக முதல்வர் செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது. தமிழ்நாடு அரசு, கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


